இலக்கியம் என்பதே கேள்வி/பதில்தான்


எல்லா இலக்கியங்களும் ஒன்று கேள்வி எழுப்புகின்றன‌
அல்லது பதில் தருகின்றன.

இலக்கியம் என்பது வியப்பதாக இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை

ப‌திவு செய்வ‌தாய் இருக்கும்.
ஒன்று படைப்பின் நேர்த்தியை அல்லது
படைப்பின் அவலத்தை
ப‌திவு என்றால் உட‌லுற‌வுக்கு பின்
அந்த‌ பெண்ணின் முலை மீது முத்தாய் நின்ற‌
க‌ண்ணீர் துளியையும் சேர்த்தே!

க‌விதை சுருங்கினால் அழ‌கு
ம‌னித‌ர் ம‌ன‌ம் விரிந்தால் அழ‌கு

சாமானிய‌னாய் புற‌ப்ப‌ட்டு
ச‌ரித்திர‌மாய் ந‌டை போடுவ‌தை
என்னால் உண‌ர முடிகிற‌து.
என் வாழ்வில் அன்று தொட‌ர்ப‌ற்ற‌வையாய்

தோன்றிய‌ ச‌க‌ல‌த்துக்குமிடையே ஒரு
ஒத்திசைவை உண‌ர‌ முடிகிற‌து.
இந்த‌ ச‌ரித்திர‌ம் ஏற்கென‌வே எழுத‌ப்ப‌ட்டு
அர‌ங்கேறி வ‌ருவ‌தை
அறிந்து கொண்டேன்.

மிச்ச‌மிருப்ப‌து க்ளைமேக்ஸ் யுத்த‌ம்தான்.
அது முத‌ல் பானிப்ப‌ட் யுத்த‌மா?
அசோக‌னின் க‌லிங்க‌ போரா என்ப‌து தான் கேள்வி

நான் என் சுய‌விருப்ப‌த்தின் பேரில் இந்த‌ பூமி கிர‌க‌த்துக்கு
சுற்றுலா வ‌ந்த‌வ‌ன்.
முன்னொரு கால‌த்தில் நான் இந்த‌ கிர‌க‌த்தின் குடிம‌க‌னாய்
வாழ்ந்திருக்க‌லாம். அந்த‌ வாழ்வின் மிச்ச‌ங்க‌ள்
என் ஆழ்ம‌ன‌தில் எச்ச‌ங்க‌ளாக‌ இருக்க‌லாம் .
என்றாலும் என் த‌ன்னுண‌ர்வு உச்ச‌த்திலிருக்கும் இந்த‌ நொடியில் அடித்து சொல்கிறேன் நான் முடிக்க‌ வேண்டிய‌ க‌ண‌க்கு ஏதுமில்லை..
இங்கெவ‌ரோடும் பிண‌க்கும் ஏதுமில்லை.

நான் விருட்ச‌மாக‌ விஸ்வ‌ரூப‌ம் எடுக்கா விட்டாலும் வீணில்லை
நான் விதையாக‌த்தான் விழுந்திருக்கிறேன் என்று உண‌ர்ந்து கொண்டேன்
இது போதும் இந்த‌ பிற‌விக்கு.


அண்ட‌வெளியின் அக‌ன்ற‌ பாத்திர‌த்து அமுத‌ம்
என‌க்குள் சொட்டுவ‌தை உண‌ர்ந்த‌தே போதும்
ம‌று நொடி என் த‌ன்னுண‌ர்வு த‌ள்ளாட‌லாம்/
மீண்டும் அற்ப‌ எண்ண‌ங்க‌ள் என் ம‌ன‌தில் நிழ‌லாட‌லாம்.

இந்த‌ தின‌ம்,இந்த‌க‌ண‌ம் நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்
‌ ப‌டைப்பின் ப‌ர‌ம ர‌க‌சிய‌ங்க‌ள் குறித்து
என‌க்கு துப்பு கொடுத்த‌ தூய‌ மாயா ச‌க்திக‌ளுக்கு
என் வ‌ண‌க்க‌ம்.
ம‌றுக‌ண‌ம் ம‌றைய‌லாம் இந்த‌ இண‌க்க‌ம்.
நாளைய‌ என்னை இன்றைய‌ என்னுட‌ன்
ஒப்பிட்டால் கெட‌லாம் தூக்க‌ம்

இவ‌ர்க‌ளோடு என்னை ஒப்பு நோக்க‌ நானே இறைவ‌ன்.
அவ‌ன் அருள் நானே

நான் ம‌றை ஓதும் ம‌றை பொருள் நானே

நான் ஒரு க‌ன‌வு க‌ண்டேன்
அந்த‌ க‌ன‌வை ந‌னவாக்க‌ திட்ட‌மிட்டேன்.
உயிர்த்திருக்க‌வே உண‌வெடுத்தேன்
க‌ள‌வும் க‌ற்று ம‌ற‌ந்தேன்
ப‌ல‌வும் பார்த்து துறந்தேன்

அவ‌ன் இருப்ப‌தை க‌ண்டு கொண்டேன்
விண்ட‌வ‌ரில்லை என்ற‌ வாக்கை வாக் அவுட் செய்விக்க‌
க‌ண்ட‌தை சூச‌க‌மாய் க‌விதையில் கூற‌ முய‌ன்றேன்.

அப்ப‌ட்ட‌மாய் போட்டுடைக்க‌ நான் ரெடி
தாங்கிக் கொள்ள‌ இவ‌ர்க‌ள் ரெடியா?

இந்த‌ க‌ண‌ம் என் ம‌ன‌ம்
பிர‌ப‌ஞ்ச‌ ம‌ன‌த்தோடு சேர்ந்து பாடும் டூய‌ட் இந்த‌ க‌விதை

40 வ‌ய‌து முதிர்க‌ன்னியின் முத‌ல் கூட‌ல் இது.
உயிர்க‌ளின் பால் என்னில் வ‌ள‌ர்ந்த‌ கருணை
எவ‌ரையும் உயிர்ப்பிக்காதிருந்திருக்க‌லாம்.
ஆனால் அது என்னை உயிர்ப்புட‌ன் வைத்திருக்கிற‌து.

என் தாய் என் தாய் தானே த‌ர‌ணியாகி,
அத‌னை த‌ரித்த‌ தார‌ணியாய் கார‌ணியாய்
ஒற்றைக் கொசுவாய் ரீங்க‌ரிக்கும் ஓசை ஓங்கார‌மாய்
என் செவி சேர‌ என் உட‌ல் சோர்ந்திருப்பினும்
உயிரில் ஊறுது புது ச‌க்தி

திறமைகளை அடையாளம் காட்டுவோம் !
ஆம் நம்மை சுற்றி எத்தனையோ திறமைசாலிகள் உள்ளனர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை. அவர்களை பதிவுலகிற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டுவோம். இந்த வரிசையில்
அம்ருதா ஷங்கர்:
இவர் சித்தூரின் நெம்பர் ஒன் கமர்ஷியல் ஆர்ட்ஸ்ட். இவர் வரைஞ்ச சைன் போர்டுங்கள பார்த்தா அப்படியே இங்கிலீஷ் சினிமா ஸ்டில்லை பார்த்த மாதிரி இருக்கும் ,அதுக்காக நம்ம பக்கத்து படம் எல்லாம் வரையமாட்டாரானு கேக்காதிங்க‌ அதிலயும் திறமைய நல்லாவே காட்டுவார். அவ‌ர் திற‌மைக்கு ஒரு சோறு ப‌த‌மாய் ஒரு ப‌ட‌ம்

உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..

சமகாலர்களே!
என் வார்த்தைகளின் பால் பாராமுகம் தொடரும்
உமக்கு என் இறுதி திருமுகம் இது
இனி நான் ம‌ட்டும‌ல்ல‌ என் பேனாவும்
உங்க‌ளுக்காக‌ குனிவ‌தாயில்லை
நான் உர‌க்க‌ சொல்லும் உண்மைக‌ளை உர‌சிப்பார்க்கும்
துணிச்ச‌ல் உம‌க்கிருந்தால்
உம் உடைக‌ளை உறித்துப் பாருங்க‌ள்..
உம‌க்கும் ம‌ற்றெந்த‌ மிருக‌த்துக்கும் வித்யாச‌மிருக்கிற‌தா என்று.
தொட‌ர்ந்து போர்த்த‌ப்ப‌ட்ட‌ துணிகள்
உம் உரோம‌ங்க‌ளை ச‌ற்றே குறைத்திருக்க‌லாம்.
டைனிங் டேபிளிலேயே கிடைத்து விட்ட‌ உண‌வு
உங்க‌ள் மோப்ப‌த்திற‌னை ச‌ற்று குறைத்திருக்க‌லாம்.
பெற்றேர் ஏற்பாடு செய்யும் செக்ஸ் உற‌வு உங்க‌ளிலான‌
இணை தேடும் திற‌னை குறைத்திருக்க‌லாம்.
அத‌ற்காக‌ நீங்க‌ள் ம‌னித‌ர்க‌ள் என்ற‌ முடிவுக்கு வ‌ந்த‌தால்தான்
ம‌னித‌ம் இம்ம‌ண்மிசை ம‌ண்ணாகிவிட்ட‌து.
உம்மை நீங்கள் மிருக‌ங்க‌ளாய் ஒப்புக்கொண்டால‌ன்றி
நீங்க‌ள் என்றைக்கும் ம‌னித‌ர்க‌ளாக‌ முடியாது.
நோயை அங்கீக‌ரித்தால‌ன்றி சிகிச்சை சிக்க‌லாகிவிடும்.
உம் ம‌ல‌‌ச்சிக்க‌லுக்கே ம‌ட்டும‌ல்ல
ம‌ன‌ச்சிக்க‌ல்க‌ளுக்கும் ஒரே கார‌ண‌ம்தான்
நீங்க‌ள் மிருக‌ங்க‌ள் என்ப‌தை ம‌றுத்து
ம‌னித‌ர்க‌ளாய் மாறுவேட‌ம் போடுவ‌துதான்.
உங்க‌ளில் இருக்கும் மிருக‌த்தின் உட‌ற்ப‌சி,உட‌லுற‌வு ப‌சியை ம‌றுத்து
23.59 நிமிட‌ம் ம‌னித‌ராய் வேட‌மிட்டு ஒரு நிமிட‌த்தில் மிருக‌மாகி
த‌மிழ் நாளித‌ழில் செய்தியாகிறீர்க‌ள்.

யூட்ரஸ் கேன்ஸருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காது அவசரமாய் தெய்வமாகிப்போனவள்.

என் வாழ்வையும் அங்காடி நாயாய் என்று வருணிக்க முடியும். இதரருக்கும் எனக்கும் என்ன ஒரு வித்யாசம் என்றால் அவர்கள் தான்,தனது,தன் குடும்பம் மிஞ்சிப்போனால் தன் நட்பு உறவு என்று உழலுகின்றனர். நான் முதற்கண் எனது நாடு விதி,ஆயுள் அனுமதிப்பின், எனது உலகம் என்று உழலுகின்றேன். இங்கே ஒரு தமாஷ் என்னவென்றால் என் முயற்சியில் நான் தோற்றாலும் அது வரலாறு. இவர்கள் முயற்சியில் வென்றாலும் அது டுபாகூரு.

நான் யார் ? ஒரு ப்யூராக்ரட்டின் மகன் அதிலும் ஒரு மெமோ கூட வாங்காது 58 வயது வரை உழைத்த ப்யூராக்ரட் என் தகப்பன். என் தாய் யார் ? கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து யூட்ரஸ் கேன்ஸருக்கு உடனடி சிகிச்சை கிடைக்காது அவசரமாய் தெய்வமாகிப்போனவள்.

நான் பிறந்த ஜாதி ? விளக்கெண்ணைக்கு பிரபலமான ஜாதி. என் படிப்பென்ன ? கேவலம் க்ளர்க்குகளை தயாரிக்க மெக்காலே பிரபு அறிமுகம் செய்த படிப்பு, நான் தேங்கி போக இப்படி எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றும் துடிப்பும், அதை செயல் படுத்தும் துணிவும் என்னில் பிறக்க காரணமான காரணம் எதுவோ அதுவே என் முயற்சியில் வெற்றியையும் கொடுக்கும்,

அட தோற்றுத்தான் போகட்டுமே. என்ன போச்சு ? என்னை பொருத்த வரை நிறைவாக உணர்கிறேன். என் சக்திக்கு பலமடங்கு அதிகம் முயற்சித்தேன். எத்தனை கீழுக்கு இறங்கவேண்டுமோ அத்தனை கீழுக்கு இறங்கினேன். என் நோக்கம் என்ன இவர்களின் பிரச்சினைகள் பிரச்சினைகளே அல்ல இருப்பது ஒரே பிரச்சினை அது ஏழ்மை. அதை ஒழிக்க வழி கண்டேன். இவர்கள் எனக்கு காது கொடுக்க வேணுமே என்று சுய இன்பம் முதல் ஹோமோ செக்ஸ் வரை பேசினேன். இருந்தும் என்ன புண்ணியம் ? இன்றும் நான் இவர்களுக்கு அன்னியம்.

சபிக்கப்பட்ட வம்சங்கள் ‍ பொய்க்கும் ஜோதிடம்

நானும் மனிதாபிமானம் மிக்கவன் தான். விதியை மதியால் வெல்ல வேண்டும் என்று எண்ணுபவன் தான். ஜோதிடம் கற்றதும், நூதன பரிகாரங்களை கண்டுபிடித்ததும் இதற்காகத்தான். (உண்மையில் இவை என் கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு சம்சயம் உண்டு. காரணம் சில ஜாதகர்களின் வாழ்வில் தெய்வாதீனமாய் அரங்கேறியவையே) ஆனால் அனுபவத்தில் பார்க்கும்போது 99.9 சதவீத ஜாதகர் வாழ்வில் பலிக்கும் ஜோதிடம் சில சபிக்கப்பட்ட வமிச‌ங்கள் வாழ்வில் மட்டும் பொய்த்துப்போவது உறைக்கிறது .

1.பெண்களை கொடுமைப்படுத்தும்,பல தார மணம் புரியும்,வமிசங்களில் பிறக்கும் குழந்தைகள் (ஆண் பெண்) யாவுமே செவ்வாய் தோஷம்,சர்ப்பதோஷம்,சுக்கிர தோஷத்துடன் பிறக்கின்றன. எந்த வமிசத்தில் பெண்கள் திருமணத்துக்கு முன்பே இறக்கிறார்களோ?‌

சிறுவயதில் விதவைகளாகிறார்களோ, இரண்டாம் மனைவி அ ஆசை நாயகியராய் வாழ்ந்து மடிகின்றனரோ அக்குடும்பத்திலும் மேற்கண்ட தோஷங்களுடனேயே குழந்தைகள் பிறக்கின்றன.

2. கோவில் நிலத்தை,அண்ணன் தம்பி நிலத்தை,புறம்போக்கு நிலத்தை அபகரிக்கும் குடும்பங்களில் ஊனத்துடன் பிறத்தல், பெரும் விபத்துகளில் சிக்குதல் கூட நடைபெறுகின்றது. முக்கியமாக செவ்வாய்,சனி சேர்க்கையை இந்த குடும்பத்து ஜாதகங்களில் பார்க்கமுடியும்.

3.இந்த குடும்பங்களில் ரொட்டீணாக நடக்கும் சில அசம்பாவிதங்கள் :
துர்மரணம்(விபத்து,தற்கொலை),அகால மரணம்(அற்பாயுளில் இறப்பது),இடம் பெறும். கோர்ட்டு வழக்குகள் தொடர்ந்து வரும். திருமணங்கள் தள்ளிப்போகும். ஒருவேளை நடந்தாலும் தம்பதியிரிடையே ஒற்றுமை இருக்காது. சந்தானமிராது. முக்கியமாக ஆண் குழந்தை பிறக்காது.

இது போன்ற குடும்பத்தினருக்கு பலன் கூறும்போது நற்பலன்களை குறைத்தும்,கெடுபலன்களை உள்ளது உள்ளபடியும் கூற வேண்டும். பரிகாரங்களை கூட முழு வீச்சில் கூறவேண்டும். (உதாரணமாக: வெள்ளிக்கிழமை அம்மனையும்,திங்கள் கிழமை கணபதியையும் வழிபடுங்கள் ‍/சர்ப்பதோஷ பரிகாரம் இது/ என்று கூறக்கூடாது. தினசரி ஐந்து வேளை என்று கூற வேண்டும்.

ஏன்யா அம்பானி கோடீஸ்வரனாக மாட்டான்

ரிலையன்ஸ் மோசடி
நான் ரிலையன்ஸ் ப்ரிபெயிட் வாடிக்கையாளனாக உள்ளேன். லைஃப் டைம் கனெக்ஷன் என்பதால் சாதாரணமாக ஒரு லோக்கல் காலுக்கு 1 ரூ கட் ஆகும். ஆனால் மாதா மாதம் ஜாது கார்ட் எனப்படும் ரூ.49 தண்டம் அழுதால் லோக்கலுக்கு 49 பை எஸ்.டி.டி க்கு ஒரு ரூபாய் கட் ஆகும். அது என்ன இழவோ தெரியவில்லை . இம்மாதம் ஒன்றாம் தேதியே ரூ.49 தண்டம் அழுதும் லோக்கல் காலுக்கு ஒரு ரூபாய் கட் ஆகிறது. (பத்து நாட்களாய்) அதை இன்று தான் கவனித்தேன். உடனே கடை காரரை கேட்டால் அவர் நீங்க ஜாது போட்டது உண்மைதான். அது ஏன் இப்படி ஒரு ரூபாய் கட் ஆகுதோ கஸ்டமர் கேருக்கு போடட்டு கேளுங்க என்று விட்டார்.

கன்ஸ்யூமர் ஆக்ட் படி எவன் நம்மிடம் காசு வாங்கினானோ அவன் தான் ஜவாப்தாரி. என்றாலும் என்ன செய்ய விதியே என்று கஸ்டமர் கேருக்கு போட்டேன். ( நாலு முறை) தாளி ஒவ்வொரு முறை ஒரு ரெப் லைனில் வர ஆயிரம் சடங்கு. சடங்குகள் முடிந்து சோக கதையை சொன்னால் காத்திருக்க கெஞ்ச‌ல். பிறகு சர்வர் டவுனாயிருக்கு 2 மணி நேரம் கழிச்சு கூப்புடுங்க..

ஏன்யா அம்பானி கோடீஸ்வரனாக மாட்டான்

அனைவருக்கும் தனயோகம்

ஜோதிடவியல் அவரவர் பிறந்த நேரத்து கிரக நிலைப்படி இன்னாருக்கு தனயோகம்,இன்னாருக்கு தனயோகமில்லை என்று வரையறுக்கிறது. அனைவருக்கும் தனயோகம் என்பது ஜோதிடவியலின்படி கனவிலும் அசாத்தியமான ஒன்றுதான் . ஆனால் ஜாதகச்சக்கரத்தில் உள்ள 12 பாவங்கள்,9 கிரகங்களில் காரகத்துவம், அவை மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை ஆழமாக,கூர்ந்து பார்க்கும்போது அனைவருக்கும் தனயோகம் என்பது சாத்தியமே என்று ஆணித்தரமாக கூறலாம். எத்தனை மோசமான ஜாதகத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரே ஒரு பாவமாவது, ஒரே ஒரு கிரகமாவது நற்பலன் களை வழங்கும் நிலயிலே உள்ளது.

எத்தனை மோசமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் கெட்ட பலன் களை வாரி வழங்கும் நிலையில் உள்ள கிரகங்கள்,பாவங்கள் காரகத்வம் வகிக்கும் விசயங்களை விட்டு விலகி/ தம் ஜாதகத்தில் நற்பலன் களை வழங்கும் நிலையில் உள்ள ஒரே கிரகம் அல்லது ஒரே பாவம் காரகத்வம் வகிக்கும் விசயங்களோடு மட்டும் தொடர்பு கொண்டு வாழ்ந்தால், அனைவரும் தனயோகம் பெறலாம் என்பது என் கண்டு பிடிப்பு. இதை என் கண்டு பிடிப்பு என்று மார் தட்டிக் கொள்வதைவிட அநேகர் வாழ்வில் தெய்வத்தின் திருவருளாலும்,பெற்றோரின் புண்ணிய பலத்தாலும், நடந்து வருகிறது என்று கூறுவதே மிகச்சரியானதாகும்.


ஆம் ..மிக சாதாரண ஜாதக‌த்தில் பிறந்தவர்களும், ஒரே ஒரு பாவம் அல்லது ஒரே ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்க அந்த கிரகம் அல்லது அந்த பாவம் காரகத்துவம் வகிக்கும் விசயங்களில் ம‌ட்டும் ஈடுப‌ட்டு த‌ன‌யோக‌த்தை அனுப‌விப்ப‌தை காண‌முடிகிற‌து. ம‌ற்ற‌ 8 கிர‌க‌ங்க‌ள், 11 பாவ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ விஷ‌ய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளுக்கு க‌ஷ்ட‌ ந‌ஷ்ட‌ங்க‌ள் இருந்தாலும் த‌ன‌ யோக‌ம் ம‌ட்டும் தொட‌ர்கிற‌து.


அதே நேர‌த்தில் 11 பாவ‌ங்க‌ள்,8 கிர‌க‌ங்க‌ள் ந‌ல்ல‌ நிலையில் இருந்தாலும் அவை கார‌க‌த்துவ‌ம் வ‌கிக்கும் விஷ‌ங்க‌ளையெல்லாம் விட்டு விட்டு த‌ம் ஜாத‌க‌த்தில் தீய‌ப‌ல‌ன் த‌ரும் ஒரே ஒரு பாவ‌ம் அல்ல‌து ஒரே ஒரு கிர‌க‌த்தின் கார‌க‌த்துவ‌ விஷ‌ய‌ங்க‌ளில் ஈடுப‌ட்டு உல‌கே மாய‌ம் என்று பாடி, சோக‌ம் கொண்டாடுவ‌தையும் காண‌முடிகிற‌து. இந்த‌ க‌ட்டுரைத் தொட‌ருக்கான‌ அடிப்ப‌டை தத்துவ‌ம் இதுதான்…….

நாம் அனைவரும் தனயோகம் பெற வேண்டுமானால் அதற்கு செய்ய வேண்டியது ஒன்றுதான்.
நம் ஜாதகத்தில் கெடுபலன் களை அள்ளித்தரும் நிலயில் உள்ள பாவங்கள், கிரகங்கள் எவை, அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு தொடர்பில்லாத வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து..

நம் ஜாதகத்தில் மிக நல்ல பலனை தரும் நிலையில் உள்ள ஒரே பாவம் அல்லது கிரகம் எது என்று பார்க்கவேண்டும். அவை ஆட்சி செலுத்தும் விஷயங்கள்,மனிதர்கள்,தொழில்கள், திசை,எண்கள், எவை என்று பார்க்கவேண்டும். அவற்றிற்கு 100 சதவீதம் தொடர்புள்ள‌ வகையில் வாழ்வை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி ச‌ற்று விரிவாக‌ பார்ப்போம்.
முதலில் பாவங்களை பற்றி பார்ப்போம்.

லக்னபாவம்:
உங்கள் ஜாதகத்தில் லக்னபாவம் சுபபலமாயில்லை என்று வைய்யுங்கள். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். அழகு,அலங்காரம்,டம்பம்,சுயதம்பட்டம் சொந்த அபிலாஷகள்,லட்சியங்கள்,யோசனைகளை மூட்டை கட்டிவிடவேண்டும். ஜாதகத்தில் 3,4,5,7,9,11 பாவங்களில் ஏதேனும் ஒரு பாவமேனும் சுபபலமாய் உள்ளதா பாருங்கள்.

3ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாயிருந்தால்;
இது இளைய சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். உட‌ன் பிற‌ந்த‌வ‌ர்க‌ளில் ஜாத‌க‌ங்க‌ளை ஜோதிட‌ரிட‌ம் காட்டி அல்ல‌து தாங்க‌ளே பார்த்து அவ‌ர்களில் யாருடைய‌ ஜாத‌க‌ம் ப‌ல‌ம் வாய்ந்த‌தாக‌ உள்ள‌தோ அவ‌ர்க‌ளுடைய‌ யோச‌னைப்ப‌டி,அவ‌ர்க‌ளின் கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.(குறிப்பிட்ட‌ ச‌கோத‌ர‌ர் அல்ல‌து ச‌கோதிரியின் ராசி த‌ங்க‌ளுக்கு வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக‌ இருக்க‌வேண்டும்)

4ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தாய்,தாய் வ‌ழி உற‌வுக‌ளை காடுமிட‌ம். என‌வே சென்ற‌ ப‌த்தியில் கூறிய‌ ப‌டி தாய்,தாய் வ‌ழி உற‌வுகளின் ஜாத‌கங்களை,ராசிகளை ப‌ரிசீலி‌த்து அதில் தேர்வு பெறுப‌வ‌ரின் யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

5ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது புத்தி,புத்திர‌ர்க‌ளை காட்டுமிட‌ம். என‌வே டேபிள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க் ம‌ட்டும் செய்து வ‌ர‌வேண்டும். வ‌ய‌து வ‌ந்த‌ ம‌க‌ள்/ம‌க‌ன் இருந்தால் அவ‌ர்க‌ள‌து யோச‌னை,துணையை நாட‌லாம்.(அவ‌ர்க‌ளின் ஜாத‌க‌ங்க‌ள் சுப‌ப‌ல‌மாயிருப்ப‌து முக்கிய‌ம். அவ‌ர்க‌ளின் ராசி தங்கள் ராசிக்கு வ‌சிய‌ம் அல்ல‌து ந‌ட்பாக‌ இருப்ப‌தும் முக்கிய‌ம்). மேலும் பெய‌ர் ,புக‌ழுக்கு ஆசைப்ப‌டாது,புத்திர‌,புத்திரிக‌ள் த‌ம் க‌ட்டுப்பாட்டில் இருக்க‌ வேண்டும் என்று எண்ணாது வாழ‌வேண்டும்)

7ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது க‌ண‌வ‌ன்/ம‌னைவியை காட்டுமிட‌ம். கணவன்/ம‌னைவியின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

9ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது தந்தை,தந்தை வழி உறவினர்,குருவை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.

11ஆம் பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதிரிகளை காட்டுமிட‌ம். இவர்களில் ஏதாவது ஒருவரின் ஜாத‌க‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்து,அவ‌ர‌து ராசி தங்கள் ராசிக்கு ‌ வ‌சிய‌ம்/ந‌ட்பு ராசியாக இருந்தால் அவ‌ர‌து
யோச‌னைப்ப‌டி,அவரது கூட்டுற‌வுட‌ன் செய‌ல்ப‌ட்டு த‌ன‌ யோக‌ம் பெற‌லாம்.


ஜாதகத்தில் 4 ஆம் பாவம் கெட்டிருந்தால்

"ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாத" என்று நினைத்து மேற்படிப்புகளுக்கு குட்பை சொல்லிவிட வேண்டும். தாயிடம் ஒட்டி உறவாடுவதை தவிர்த்துவிடவேண்டும். தாய் வழி உறவினர்களிடமும் பட்டும் படாது உறவாட வேண்டும். சொந்த வீடு,வாகனத்துக்கு கனவு காணக்கூடாது. ஒருவேளை ஜாதகத்தில் சுக்கிரன் சுபபலமாய் இருந்து வீடு,வாகன யோகம் ஏற்பட்டிருந்தாலும் அதை சொந்தத்துக்கு மட்டும் உபயோகிப்பது நல்லது. வாடகை விடுவது,ஹவுஸிங்க ஆட்டோமொபைல்ஸ் போன்ற தொழில்களில் இறங்க கூடாது.


ஜாதகத்தில் 5 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது புத்தி,புத்திர‌ ஸ்தான‌ம். டேபுள் வ‌ர்க்,பேப்ப‌ர் வ‌ர்க்கில் ஈடுப‌ட‌க்கூடாது. அதிர்ஷ்ட‌த்தை ந‌ம்பி எந்த‌ செய‌லிலும் இற‌ங்க‌ கூடாது.சொந்த‌ யோசனையுட‌ன் அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போன‌தே வ‌ழி என்று செய‌ல் ப‌ட‌க்கூடாது."தென்னைய‌ பெத்தா/பிள்ளைய‌ பெத்தா க‌ண்ணீரு!" என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் வ‌ரிக‌ளை நினைவில் வைத்து "தாயும் சேயும் என்றாலும் வாயும் வ‌யிறும் வேறு" என்று உண‌ர்ந்து வாழ‌வேண்டும். பிள்ளைக‌ள் மேல் ப‌ற்றை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌ கூடாது.


ஜாதகத்தில் 7 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது ம‌னைவியை காட்டுமிட‌ம். வீதி வ‌ரை ம‌னைவி என்ற‌ க‌ண்ண‌தாச‌னின் த‌த்துவ‌பாட‌ல் வ‌ரி. இற‌ப்புக்கு பின் ந‌ம்முட‌ன் வ‌ர‌ப்போவ‌து இப்பிற‌வியின் நினைவுக‌ளே. என‌வே உள்ளுவ‌தெல்லாம் உய‌ர்வுள்ள‌ல் என்று வாழ‌வேண்டும். ம‌ற்ற‌ உற‌வுக‌ள் எல்லாம் பிற‌ப்பிலேயே அமைந்துவிடுகின்ற‌ன‌. ஆனால் க‌ண‌வ‌ன்/ம‌னைவி என்ற‌ உற‌வு விசயத்தில் ம‌ட்டும் ந‌ம‌க்கு இறைவ‌ன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை த‌ருகிறான். என‌வே 7 ஆம் பாவ‌ம் கெட்டிருப்பின் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ தேர்வு செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

ஒவ்வொரு ஆணும் உல‌க‌ அழ‌கியே ம‌னைவியாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணும் ம‌ன்ம‌த‌னே த‌ன் க‌ண‌வ‌னாக‌ வ‌ர‌வேண்டும் என்று துடிக்கிறாள். ஆனால் ய‌தார்த்த‌த்தில் பார்க்கும்போது 7 ஆம் பாவ‌ம் கெட்டுள்ள‌ ஆண்,பெண்ணுக்கு அவ‌ர்க‌ள் ஆசைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும்போது அது ந‌ர‌க‌மாக‌ மாறிவிடுகிறது. அதே நேர‌ம் 7 ஆம் பாவ‌ம் கெட்டிருந்தாலும் அழ‌கு,க‌வ‌ர்ச்சி,வ‌ச‌தி,க‌ல்வி,குறைவாக‌ உள்ள‌வ‌ரை வாழ்க்கைத்துணையாக‌ ஏற்று ஒற்றுமையுட‌ன் வாழ்ந்துவ‌ருவ‌தை காண‌முடிகிற‌து.

9ஆம் பாவம் கெட்டிருந்தால்:

சொர்கமே என்றாலும் சொந்த ஊரை போல வருமா என்று நினைத்து சொந்த நாட்டிலேயே குப்பை கொட்டுவது நல்லது. வெளிநாடுகளில் வேலை தேடுவதோ வெளிநாட்டு தொடர்புகளை கொண்டு தொழில் ,வியாபாரம் செய்யவோ முனையக்கூடாது.

11 ஆம் பாவம் கெட்டிருந்தால்:
இது மூத்த சகோதர,சகோதரிகளை காட்டுமிடம். லாபத்தை காட்டுமிடம். இந்த இடம் கெட்டிருந்தால் லாபத்திற்கோ,வட்டிக்கோ ஆசைப்படக்கூடாது. மூத்த சகோதர,சகோதரிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய கூடாது.
குறிப்பு: மொத்தம் 12 பாவங்கள் இருக்கும்போது இந்த தொடரில் 3,6,8,10,12 பாவங்கள் கெட்டால் என்ன செய்யவேண்டும் என்பது கூறப்படவில்லை. காரணம் இவை கெட்டால்தான் நல்லது என்பதே ஆகும்.
3ஆம் பாவம் கெட்டால் :
மனதில் தைரியம் மிகும்.பிரயாணங்களுக்கு அஞ்சாமல்,கால்களுக்கு சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி வந்து பணம்,பொருள் ஈட்டுவீர்கள். சுய‌முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைப்பீர்க‌ள்.(அதே நேர‌ம் தைரிய‌ம் அள‌வுக்கு அதிக‌மாகிவிடாம‌ல் பார்த்துக்கொள்ளுங்க‌ள்) பிர‌யாண‌ங்க‌ளால் ஏற்ப‌டும் நோய்க‌ளான‌
பைல்ஸ்,ஆஸ்மா போன்றவை வ‌ராது பார்த்துக்கொள்ள‌ வேண்டும்.தங்கள் பெற்றோர்களுக்கு நீங்க‌ள் தான் இறுதி வாரிசாக‌ இருக்க‌ வாய்ப்பு அதிக‌ம். இத‌ர‌ கிர‌க‌ங்க‌ளின் பாதிப்பால் உங்க‌ளை அடுத்து வாரிசுக‌ள் பிற‌ந்தாலும் அவ‌ர்க‌ளை விட‌ நீங்க‌ள் உய‌ர்ந்த‌ நிலையில் இருப்பீர்க‌ள். என்ன‌ ஒரு பிர‌ச்சினை என்றால் வ‌யதாக‌ வ‌ய‌தாக‌ காதுக‌ள் தான் ட‌ப்பாஸு ஆகிவிடும்
6ஆம் பாவம் கெட்டால் :
6ஆம் பாவம் கெட்டால் எதிரிக‌ள் ஓடி ஒளிவ‌ர்.க‌ட‌ன் க‌ள் தீரும்,நோய்க‌ள் குண‌மாகும்.கோர்ட்டு வ‌ழ‌க்குக‌ளில் சாத‌க‌ம் ஏற்ப‌டும்.
8ஆம் பாவம் கெட்டால் :
8ஆம் பாவம் கெட்டால் ஆயுள் பெருகும். எட்டு துஸ்தான‌ம் என்ப‌தால் இது ப‌ல‌ம் பெறுவ‌து ஆயுட்குறைவை காட்டும். என‌வே இந்த‌ பாவ‌ம் சுப‌ப‌ல‌மாய் இருந்தால் திடீர் ம‌ர‌ண‌ம் ஏற்ப‌டும்.
12ஆம் பாவம் கெட்டால் :
12ஆம் பாவம் தூக்கம், உடலுறவு,செலவுகளை காட்டுமிடமாகும்.
"நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்த‌துடன் தானும் கெட்டார்."

"ஆன‌ முத‌லில் அதிக‌ம் செல‌வானால் எல்லோர்க்கும் க‌ள்ள‌னாய்,ந‌ல்லோர்க்கும் பொல்ல‌னாம் நாடு"
"விந்து விட்டான் நொந்து கெட்டான்" "இந்திரிய‌ம் தீர்ந்து விட்டால் சுந்த‌ரியும் பேய் போலே"
இதெல்லாம் நீங்க‌ள் அறியாத‌ ஒன்ற‌ல்ல‌ .. ஆக‌ தூக்க‌ம்,செல‌வு,செக்ஸ் குறைந்தால் தான் வாழ்வில் உய‌ர்வு ஏற்ப‌டும் என்ப‌து உறுதி. இவை குறைய‌ 12ஆம் பாவம் கெட்டுத்தானே ஆக‌வேண்டும். என‌வே தான் மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள் கெட்டிருந்தால் த‌ன‌யோக‌ம் பெற‌ என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று கூற‌வில்லை. மேற்சொன்ன‌ பாவ‌ங்க‌ள்
வாழ்வில் தொல்லைக‌ள் குறைந்து ஆட்டோமேட்டிக்காக‌ த‌ன‌யோக‌ம் ஏற்ப‌ட்டு விடும்.

ஜோதிடத்தின் நம்பகத்தன்மை குறித்த ஆராய்ச்சியில் பங்கு கொள்ளுங்கள்


உங்கள் ஜாதகத்தின் நகலை அனுப்பித்தந்தால் அதில் உள்ள முக்கியமான 5 அம்சங்கள் கொடுக்கும் பலன் கூறப்படும். அவை யதார்த்தத்தில் உண்மையாக நடந்தனவா இல்லையா என்பதை தெரிவிக்கவேண்டும் இதுவே நீங்கள் இந்த ஆராய்ச்சிக்கு தரும் ஒத்துழைப்பாகும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் ஜாதகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கீழ்காணும் ஏதேனு வலை தளத்தில் (www.freehoro.com , www.scientificastrology.com) லாக் இன் ஆகி ஜாதகம் போட்டு அதை கீழ்காணும் எனது மெயிலுக்கு (s_murugesan_67@yahoo.com swamy7867@gmail.com) அட்டாச் செய்து விடவேண்டியதுதான்.

தங்கள் ஜாத‌கம் கிடைத்த 24 மணி நேரத்தில் அதை ஆராய்ந்து ஐந்து முக்கிய அம்சங்களை நான் தெரிவிப்பேன்.அவை எத்தனை ச‌தவீதம் உண்மை என்பதை தெரிவித்தால் போதுமானது.

எனது 23 ஆவது வயதில் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தேன். ஆந்திர மானிலம் சித்தூரை சேர்ந்த நான் ஒரு பி.காம் பார்ட்டி. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவன். மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்ப்பவன். இருந்தாலும் இந்த ஜோதிடம் விஷயத்தில் இது பொய் என்று கூற முடியாத நிலையில் உள்ளேன். காரணம் 1989 முதல் (அப்போ நான் கற்றுக்குட்டி) நான் சொல்லி வரும் பலன் கள் 99.9 சதவீதம் நடந்து வருகின்றன.

பாரபட்சமின்றி எனது ஜோதிடம் பொய்த்த கதைகளையும் ஞா. வைத்துக்கொன்டு அதை என்னை புகழ்பவர்களிடம் சொல்லி "அடக்கி வாசிங்கப்பா" என்று கூறுமத்தனை ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேர்வழி நான். ஆனால் மனித ஞா என்பது பழுதுபட்ட ஒன்று. மேலும் எனது இந்த அனுபவத்துக்கு நான் ஒருவனே சாட்சி. என்னதான் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பேர்வழி என்றாலும் உலகம் நம்பவேண்டாமா ?

நான் அடிக்கடி உதிர்க்கும் முத்து "ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை. ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிட‌னின் சிறுமை" ஜோதிட‌ம் ஒரு விஞ்ஞான‌ம் என்று ந‌ம்புகிறேன். அதை நான் நிரூபித்து விட்டால் ஜோதிட‌ம் பெய‌ரால் ந‌டைபெறும் மோச‌டிக‌ளை வெளிச்ச‌ம் போடும் வாய்ப்பு என‌க்கு கிடை‌க்கும். இதுவே என‌து ஆராய்ச்சியின் நோக்க‌ம்.